சென்னையில் 4 புதிய பூங்கா, 8 உடல் பயிற்சி கூடங்கள்: மு.க.ஸ்டாலின் 18-ந் தேதி திறக்கிறார்

Font size: Decrease font Enlarge font
image

 சென்னை மேயர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
 
தியாகராயநகரில் ரூ.1 கோடியே 30 லட்சம் செலவில் பனகல் பூங்கா அழகுபடுத்தப்பட்டுள்ளது. இதேபோல் கோயம்பேடு பஸ் நிலையம் அருகே ஜெய்நகர் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. இவை உள்பட 4 பூங்காக்கள் புதிதாக திறக்க தயாராக உள்ளது.
 
இதே போல் சூர்யா நகர், வெங்கடபுரம், ஸ்டன்ஸ் சாலையில் உடற்பயிற்சி கூடங்கள் என மொத்தம் நகரில் 8 உடற்பயிற்சி கூடங்கள் நவீன உபகரணங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
 
இவை தவிர 9 மருந்தகங்கள் 5 பள்ளிக்கட்டிடங்கள், 6 பல்நோக்கு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
 
இது தவிர நவீன குப்பை மாற்று நிலையம் என மொத்தம் 68 வளர்ச்சி பணிகள் ரூ.18 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
 
தியாகராயநகர், கே.கே.நகர், கோபாலபுரம் கோயம்பேடு பஸ் நிலையம் எதிரே என 4 இடங்களில் 18-ந்தேதி காலை 9 மணிக்கு நடைபெறும் விழாவில் துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று திட்டங்களை திறந்து வைக்கிறார்.
 
இவ்வாறு மேயர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

  • email Email to a friend
  • print Print version
Advertisement

Advertisement