கோவூரில் நாளை தொடக்கம் 350 படுக்கை வசதியுடன் மாதா ஆஸ்பத்திரி; அமைச்சர் அன்பழகன் திறந்து வைக்கிறார்

Font size: Decrease font Enlarge font
image

 சென்னை போரூர் அருகே உள்ள கோவூரில் மாதா மருத்துவமனை புதிதாக கட்டப்பட்டுள்ளது.
 
350 படுக்கை வசதிகளுடன் செயல் பட இருக்கும் இந்த மருத்துவமனை திறப்பு விழா நாளை மாலை 4 மணிக்கு நடக்கிறது. நிதி அமைச்சர் க.அன்பழகன் ஆஸ்பத்திரியை திறந்து வைத்து சிறப்பு ரையாற்றுகிறார்.
 
அவசர சிகிச்சை பிரிவை அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைக்கி றார். மாநில சிறுபான்மை ஆணைய தலைவர் வின்சென்ட் சின்னதுரை ஆய்வக பிரிவை துவக்கி வைக்கிறார்.
 
எக்ஸ்ரே பிரிவை ஊராட்சி ஒன்றிய தலைவர் ஆ.மனோகரன் துவக்கி வைக்கிறார்.
 
மாதா குழும நிறுவனங் களின் நிறுவன தலைவர் டாக்டர் சூ.பீட்டர் விழாவுக்கு தலைமை தாங்கி அனைவரையும் வரவேற்று பேசுகிறார்.
 
இந்த ஆஸ்பத்திரி திறக்கப்படுவதால் போரூர், நெல்லூர், தண்டலம், சோமங்கலம், குன்றத்தூர், மாங்காடு, பூந்தமல்லி, பல்லாவரம் என சுற்றுப்புற மக்களுக்கு தர மான சிகிச்சை கிடைக்க வழிவகை ஏற்பட்டுள்ளது.
 
ஏழைகளுக்கு இலவச சிகிச்சையும், மற்றவர்களுக்கு குறைந்த செலவிலும் சிகிச்சை கிடைக்கும். மருந்துக்கு மட்டுமே பணம் வாங்கப் படும். டாக்டரை பார்ப்ப தற்கும், ஆலோசனைக்கும் கட்டணம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

  • email Email to a friend
  • print Print version
Advertisement

Advertisement