மாரடைப்பை ஏற்படுத்தும் நீரிழிவு நோய் மாத்திரை தடை செய்ய பரிந்துரை
நூற்றுக்கணக்கான நீரிழிவு நோயாளிகள் தற்போது “அவந்தியா” என்ற மாத்திரையை சாப்பிட்டு வருகின்றனர். ஆனால் அந்த மாத்திரை தேவையில்லாத வகையில் இருதய நோய்களையும், மாரடைப்பையும் ஏற்பபடுத்துவதாக தெரிய வந்துள்ளது.
எனவே, அந்த மாத்திரையை விற்பனை செய்ய தடை விதித்து அரசு ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே அவந்தியா மாத்திரைக்கு பதிலாக “ஆக்டாஸ்” என்ற மாத்திரை வழங்கப்பட்டு வருகிறது. இந்த மாத்திரை சாப்பிட்டவர்களில் மாதந்தோறும் 500 பேர் மாரடைப்பு மற்றும் இருதய பாதிப்பில் இருந்து தடுக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த தகவல் உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், அவந்தியா மாத்திரை விற்பனையாளர்கள் இதை மறுத்துள்ளனர். இந்த மாத்திரைகள் மாரடைப்பை ஏற்படுத்தும் என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.



del.icio.us
Digg
