மகளிர் இட ஒதுக்கீடு மசோதா: மத்திய அரசு சமரச முயற்சி; அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை
பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்தது.
14 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருந்த இந்த மசோதாவை மகளிர் தினமான நேற்று நிறைவேற்றி விட வேண்டும் என்று திட்டமிட்டனர்.
இதற்காக பாராளுமன்ற மேல்சபையில் மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
இதை நிறைவேற்ற பாரதீய ஜனதா, கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் பல்வேறு எதிர்க் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.
ஆனால் முலாயம்சிங்கின் சமாஜ்வாடி கட்சி, லல்லு பிரசாத்தில் ராஷ்டீரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளத்தின் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அவர்கள் பெண்கள் இட ஒதுக்கீட்டில் தலித்துக்கள், பிற்படுத்தப்பட்டோர், முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். அவர்கள் கோரிக்கை ஏற்கபடாததால் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நேற்று பாராளுமன்றம் கூடியதும் இந்த கட்சியினர் இரு அவைகளிலுமே அமளியில் ஈடுபட்டு பாராளுமன்றத்தை நடக்கவிடாமல் செய்தனர். மேல்சபை 2 முறை ஒத்தி வைக்கப்பட்ட பிறகு இடஒதுக்கீடு மசோதா மேல் சபையில் தாக்கல் செய்யப்பட்டது.
அதை சமாஜ்வாடி, ராஷ்டீரிய ஜனதா தளம் எம்.பி.க்கள் கிழிந்து எறிந்து ரகளையில் ஈடுபட்டனர். சபையை நடத்த விடாதபடி செய்தனர். இதனால் நேற்று மசோதா மீது ஓட்டெடுப்பு நடத்த முடியவில்லை. 6 முறை சபையை ஒத்தி வைத்தும் நிலைமை கட்டுக்குள் வராததால் நேற்று ஓட்டெடுப்பு நடக்காமலே சபை ஒத்தி வைக்கப்பட்டது. இன்று பகல் 11 மணிக்கு மீண்டும் சபை கூடியது. இன்று எப்படியாவது ஓட் டெடுப்பை முடித்து விட திட்டமிட்டு உள்ளனர்.
இதற்காக எதிர்ப்பாளர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டது.
நேற்று இரவு இது சம்பந்தமாக காங்கிரஸ் உயர்மட்டக்குழு கூடி ஆலோசனை நடத்தியது. சோனியா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங், அகமது பட்டேல், மத்திய மந்திரிகள் பிரணாப் முகர்ஜி, ஏ.கே.அந்தோணி, ப.சிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர் கள் எதிர்ப்பாளர்களை சமா தானப்படுத்துவது என்று முடிவு எடுத்தனர்.
இதன்படி மத்திய மந்திரி பிரணாப்முகர்ஜி எதிர்ப்பு அணி எம்.பி.க்களிடம் டெலிபோனில் பேசி சமா தானப்படுத்தினார். பிரதமர் மன்மோகன்சிங் இன்று முலாயம்சிங் யாதவ், லல்லு பிரசாத் யாதவ், ஐக்கிய ஜனதா தளம் தலை வர் சரத்யாதவ் ஆகியோரை அழைத்து சமரசம் செய்தார்.
பாரதீய ஜனதா, கம்யூ னிஸ்டு கட்சிகள் பிரச்சினை ஏற்படுத்தி விடாமல் தடுக்கும் முயற்சியில் மத்திய மந்திரி பிரணாப்முகர்ஜி ஈடுபட்டார். அவர் இன்று காலை பாரதீய ஜனதா மூத்த தலைவர் அருண் ஜேட்லியை சந்தித்து பேசினார். கம்யூனிஸ்டு தலைவர்களையும் சந்தித் தார்.
தி.மு.க., திரிணாமுல் காங் கிரஸ் எம்.பி.க்களுடனும் அவர் பேச்சு வார்த்தை நடத் தினார்.
இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் டி.ராஜா கூறும்போது பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற இடது சாரி கட்சிகள் முழு ஒத்து ழைப்பு கொடுக்கும் என்றார்.
பெண்கள் மசோதாவை எதிர்ப்பதில் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் இலியாஸ் அலி, தீவிரமாக இருக்கிறார். அவரையும் காங்கிரஸ் தலைவர்கள் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் நான் ஒரு போதும் எதிர்ப்பை கைவிடமாட்டேன் என்று அவர் கூறிவிட்டார்.



del.icio.us
Digg
