பெண்கள் இயக்கும் விமான போக்குவரத்து: ஏர் இந்தியா அறிமுகம் சர்வதேச மகளிர் தினம் நேற்று உலக முழுவதும் கொண்டாடப்பட்டது.

Font size: Decrease font Enlarge font
image

மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் நேற்று ஏர் இந்தியா நிறுவனம் முழுக்க முழுக்க மகளிரே இயக்கும் விமான போக்குவரத்தை முதல் முறையாக அறிமுகப்படுத்தியது.
 
மும்பையில் இருந்து அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகருக்கு வழியில் எங்கும் நிற்காமல் 14 மணி நேரம் தொடர்ந்து பயணம் செய்யும் வகையில் போயிங் 777-200 ரக விமானத்தை முழுவதும் பெண்களே இயக்கும் வகையில் ஏர் இந்தியா நிறுவனம் ஏற்பாடு செய்து இருந்தது.

பெண்களே இயக்கும் இந்த விமானத்தில் பெண் கேப்டன்கள் மிரன்டா, சுனிதா நருல்லா ஆகியோர் விமானத்தின் கமாண்டர்களாகவும், பெண் கேப்டன்கள் சுவாதி ரவால், நேகாகுல்கர்னி ஆகியோர் விமானத்தின் முதல் அதிகாரிகளாகவும் இருந்தனர்.

  • email Email to a friend
  • print Print version
Advertisement

Advertisement