ஆந்திரா சட்டசபை 2 முறை ஒத்திவைப்பு

Font size: Decrease font Enlarge font
image

 ஆந்திராவில் பாக்சைட் சுரங்கத்திலிருந்து பாக்சைட் கனிமத்தை வெட்டி எடுப்பது தொடர்பாக 2 நிறுவனத்திடம் ஆந்திர அரசு ஒப்பந்தம் செய்து கொண்டது.

இது சம்பந்தமாக எதிர்ப்பு தெரிவித்து இன்று பாரதீய ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
 
இதை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் இந்த ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கக்கோரி அமளியில் ஈடுபட்டனர்.

இதற்கு சுரங்கத்துறை மந்திரி சீனிவாஸ் ரெட்டி பதிலளித்தார். இதில் திருப்தி அடையாத தெலுங்குசேத கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.

இதை தொடர்ந்து சபாநாயகர் கரன்குமார் ரெட்டி சட்டசபையை 15 நிமிடங்கள் ஒத்தி வைத்தார்.
 
15 நிமிடத்திற்கு பிறகு கூடிய சட்டச்சபையில் தெலுங்குசேத கட்சியினர் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக மீண்டும் சட்டசபை 1/2 மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

  • email Email to a friend
  • print Print version
Advertisement

Advertisement