கட்டபஞ்சாயத்து கொடுமை: காதல் திருமண ஜோடியை அண்ணன்- தங்கை ஆக்கினர்; கணவர் கையில் ராக்கி கயிறு கட்ட வைத்தனர்

Font size: Decrease font Enlarge font
image

அரியானா மாநிலம் பிவானி அருகே உள்ள மாஸ்பூர் என்ற இடத்தை சேர்ந்தவர் ஸ்ரீபகவான். பக்கத்து ஊரான மக்தானி கிராமத்தை சேர்ந்தவர் கவிதா. இவர்கள் இருவரும் கடந்த வாரம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
 
இதில் ஸ்ரீபகவான் லேகா என்ற ஜாதியை சேர்ந்தவர். கவிதா பாகத் என்ற ஜாதியை சேர்ந்தவர். இந்த இரு ஜாதியினரும் சகோதரர் உறவு முறையாக கருதுகின்றனர். எனவே அவர்களுக்குள் திருமண உறவு வைத்து கொள்வது இல்லை. இதை மீறி இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதுபற்றி பஞ்சாயத்தில் புகார் செய்யப்பட்டது. இந்த பஞ்சாயத்து முன்னாள் முதல்-மந்திரி ஹூகம்சிங் தலைமையில் இயங்கி வருகிறது.
 
பஞ்சாயத்தார் ஒன்றுகூடி பேசினார்கள். தம்பதியை வரவழைத்து விசாரித்தனர். இரு ஜாதியினரும் சகோதரர் முறையாக இருப்பதால் உங்கள் திருமணத்தை ஏற்க முடியாது. இப்போது முதல் நீங்கள் அண்ணன்- தங்கை என அறிவிக்கப்படுகிறீர்கள். இருவரும் பிரிந்து விட வேண்டும் என்று தீர்ப்பு கூறினார்கள்.
 
பின்னர் கவிதாவை ஸ்ரீபகவான் கையில் ராக்கி கயிறு கட்டும்படி உத்தரவிட்டனர். அதன்படி அவரது கையில் ராக்கி கயிறு கட்டினார். இருவரும் பிரிந்து வாழவேண்டும். இதை மீறினால் கடும் தண்டனை வழங்கப்படும் என்றும் எச்சரித்தனர். இதைத் தொடர்ந்து இருவரையும் அவரவர் குடும்பத்தினர் அழைத்து சென்றனர்.

  • email Email to a friend
  • print Print version
Advertisement

Advertisement