மாணவர்களுக்கு ரூ.1500க்கு மலிவு விலை கம்ப்யூட்டர்; மத்திய அரசு அறிமுகம்
இந்தியாவில் உள்ள எல்லா மாணவர்களுக்கும் குறைந்த விலையில் கம்ப்யூட்டர் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ஐ.ஐ.டி. பேராசிரியர்கள், நிபுணர்கள் கொண்ட குழு மலிவு விலை கம்ப்யூட்டரை வடிவமைத்துள்ளது.
வழக்கமான கம்ப்யூட்டர் போலவே எல்லா நவீன வசதிகளும் இந்த குறைந்த விலை கம்ப்யூட்டரிலும் செய்யப்பட்டுள்ளன. தற்போது இந்த கம்ப்யூட்டர் விலை 1500 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த கம்ப்யூட்டரை மத்திய அரசு நேற்று டெல்லியில் வெளியிட்டது. மத்திய மனித ஆற்றல் துறை மந்திரி கபில்சிபல் மலிவு விலை கம்ப்யூட்டரை அறிமுகம் செய்தார்.
விழாவில் மந்திரி கபில் சிபல் பேசியதாவது:-
நாட்டில் உள்ள அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் திட்டமிட்டப்படி மலிவு விலை கம்ப்யூட்டர் வழங்கப்படும். அடுத்த ஆண்டு (2011) முதல் கம்ப்யூட்டர்கள் வழங்கும் பணி தொடங்கும். மத்திய அரசின் நீண்ட நாள் முயற்சி தற்போது செயல்வடிவம் பெறத் தொடங்கி உள்ளது.
மத்திய மனித ஆற்றல் துறை உதவியுடன் மலிவு விலை கம்ப்யூட்டர் வடி வமைக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள், தொழில் முனைவோர்கள் மலிவு விலை கம்ப்யூட்டரை அதிக அளவில் தயாரித்தால் இதன் விலையை மேலும் குறைக்க முடியும்.
500 ரூபாய்க்குக் கூட கம்ப்யூட்டரை மிக மலிவாக மத்திய அரசால் வழங்க முடியும். அதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. மலிவு விலை கம்ப்யூட்டரில் வீடியோ, வெப்கான்பரன்ஸ், மல்டி மீடியா, இணையதள வசதிகளும் இடம் பெற்றுள்ளன.
மாணவ- மாணவிகளுக்கு இந்த மலிவு விலை கம்ப்யூட்டர் மிக, மிக பயன் உள்ளதாக இருக்கும்.
இவ்வாறு மத்திய மந்திரி கபில்சிபல் கூறினார்.



del.icio.us
Digg