வெளிநாட்டு மாணவியை கற்பழித்த பள்ளி முதல்வர்; போலீசில் மேலும் ஒரு புகார்

Font size: Decrease font Enlarge font
image

 ஆந்திர மாநிலம் ரெங்கா ரெட்டி மாவட்டம் விகாராபாத்தில் உள்ள `பார்க்வுட்' சர்வதேச பள்ளியின் முதல்வர் சலாவுதீன் அயூப். இவர் மீது அப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வரும் அஜிதா என்ற மாணவி போலீசில் கற்பழிப்பு புகார் கொடுத்தார்.
 
விசாரணையில் சலாவு தீன் அஜிதா உள்பட 5 மாணவி களை மயக்க குளிர்பானம் கொடுத்து கற்பழித்திருந்தது தெரியவந்தது. மேலும் இதை வீடியோ படமாக எடுத்து மிரட்டியதும் அம்பலமானது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சஞ்சல்கடா சிறையில் அடைத்தனர்.
 
இந்த நிலையில் விகாராபாத் போலீஸ் நிலையத்தில் கொரியா நாட்டை சேர்ந்த மாணவி பெங்சூயி (பெயர் மாற்றம்) சலாவுதீன் மீது கற்பழிப்பு புகார் கொடுத்தார். அதில் "நான் பார்க்வுட் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறேன்.
 
ஒரு நாள் பள்ளி முதல்வர் சலாவுதீன் எனக்கு இன்டர்நெட்டில் அறிவியல் பாடம் பற்றிய தகவல்களை காட்டுவதாக கூறி தனி அறைக்கு அழைத்து சென்றார். திடீரென ஆபாச படங்களை காட்டினார்.

நான் உடனே வெளியேற முயன்றேன். என்னை சமா தானப்படுத்திகுளிர் பானம் கொடுத்தார். அதை குடித்ததும் நான் மயங்கி விட்டேன். அப்போது அவர் என்னை கற்பழித்து விட்டார். அதை தனது வீடியோ கேமராவிலும் படம் எடுத்தார்.
 
பின்னர் என்னிடம் அந்த வீடியோ படத்தை இன்டர் நெட்டில் வெளியிட்டு உன்னை அசிங்கப்படுத்தி விடுவேன் என்று மிரட்டி 21 முறை என்னை நாசம் செய்தார். அவரிடம் உள்ள அந்த ஆபாச வீடியோபடத்தை கைப்பற்றி அழித்து விடவேண்டும். என்னைப் போல் ஏராளமான மாணவி களை மிரட்டி கற்பழித்த பள்ளி முதல்வர் மீது கடுமை யான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
 
கொரிய மாணவி போலீசாரிடம் அழுதபடியே தனக்கு நேர்ந்த கொடுமைகளை விவரித்தார். இதையடுத்து போலீசார் பார்க்வுட்பள்ளியில் சோதனை நடத்திய போது, சலாவுதீன் அறையின் 4 பக்க மும் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.
 
அவர் மாணவிகளை கற்பழித்த வீடியோ படத்தை இன்டர்நெட்டில் வெளியிட்டாரா? அவரது வலையில் சிக்கிய வேறு மாணவிகள் யார்? என்பது பற்றியும் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். இதற்கிடையே அப்பள்ளிக்கு மாணவிகளை அனுப்ப பெற்றோர் தயக்கம் காட்டுகிறார்கள். அவர்களை வேறு பள்ளிகளில் சேர்க்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.

  • email Email to a friend
  • print Print version
Advertisement