கடல் தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான சந்திப்பினை ஏற்பாடு செய்து தருமாறு நிருபமாவிடம் டக்ளஸ் வேண்டுகோள்

Font size: Decrease font Enlarge font

 

இந்திய கடற்தொழிலாளர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறிப் புகுந்து இழுவைப் படகுகளின் மூலம் தொழில் புரிந்து வருவதால் இவ்வாறான பிரச்சினைகளுக்கு எமது உள்@ர் கடற்தொழிலாளர்கள் தொடர்ந்தும் முகங்கொடுத்து வருவது குறித்தும் இப்பிரச்சினையை சுமுகமாகத் தீhத்துக் கொள்வது பற்றியும் இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமாராவுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியுள்ளார்.

இலங்கையின் கடற்பிராந்தியத்திற்குள் இந்தியக் கடற்தொழிலாளர்கள் ஊடுருவதால் இலங்கைக் கடற்தொழிலாளர்களது வாழ்வாதாரத்தை அது பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், இது தேவையற்ற பகைமை உணர்வுக்கு வித்திடுவதாகவும் நிருபமாராவிடம் தான் விளக்கிக் கூறியிருப்பதாகத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இப்பிரச்சினையை இருதரப்பினரும் இணைந்து சுமுகமாகத் தீர்த்துக் கொள்ள வசதியாக இந்திய மத்திய அரசுடனும் தமிழக மாநில அரசுடனும் தொடர்பு கொண்டு முரண்பாடுகளுக்குள் சிக்கியிருக்கும் கடற்தொழிhளர்களது சங்கங்களின் பிரதிநிதிகளுக்கிடையில் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யும்படியும்  வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த வேண்டுகோளுக்கு சாதகமான பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கை தனக்கிருப்பதாகவும் தெரிவித்தார். 

அவ்வாறானதொரு சந்திப்பின் மூலம் இப்பிரச்சினையை நாம் நிரந்தரமாகத் தீர்த்துக் கொள்ள முடியுமென்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நம்பிக்கைத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. 

வடமராட்சி மற்றும் மயிலிட்டி பகுதி கடற்தொழிலாளர்கள் இந்திய இழுவைப் படகுகளின் செயற்பாடுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவிடம் முறைப்பாடு செய்திருந்தனர்.

வடமராட்சி பகுதி கடற்தொழிலாளர்களும் இடம்பெயர்ந்து வந்து அப்பகுதியில் தொழிலில் ஈடுபட்டு வரும் மயிலிட்டி பகுதி கடற்தொழிலாளர்களும் இதனால் பல கோடி ரூபா நஷ்டமடைந்துள்ளதாகவும், இந்திய கடற்தொழிலாளர்களது இழுவைப் படகுகள் வடமராட்சி கரையிலிருந்து சுமார் 5 கிலோ மீற்றர் தூரம் வரை மிக அண்மித்த நிலையில் அத்துமீறி புகுந்து தொழிலில் ஈடுபட்டு தாங்கள் வீசி வைத்திருந்த வலைகளை அறுத்துச் சென்றுள்ளதால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இப்பகுதி கடற்தொழிலாளர்கள் சார்பில் வலிகாமம் வடக்கு கடற்தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் அ.யோகராசா அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் முறைப்பாடு செய்துள்ளார். 

 

  • email Email to a friend
  • print Print version
Advertisement

Advertisement