தமிழ் பேசும் மக்களின் வரலாற்று சுயநிர்ணய உரிமை குறித்து பண்டா, டட்லி ஒப்பந்தங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன.

Font size: Decrease font Enlarge font

 

பண்டா - செல்வா ஒப்பந்தத்தின் போது வடக்கு, கிழக்கு மாகாணம் தமிழ் பேசும் மக்கள் மொழி, கலாசாரம் மற்றும் வரலாற்று ரீதியாக வாழ்ந்துவரும் பிரதேசம் அதனை பேணிப்பாதுகாக்கும் உரித்து தமிழ் பசும் மக்களுக்கு உண்டு என்று சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எஸ்.டப்ளியூ.ஆர்.டி பண்டாரநாயக்கா தெரிவித்திருந்தார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருமலை மாவட்ட தலைமை வேட்பாளருமான இரா சம்பந்தன் மூதூர் உப்பூரல் கிராமத்தில் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்.

மேலும் உரையாற்றிய அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம்இதனை நினைவுபடுத்தியிருந்தேன். பண்டா - செல்வா ஒப்பந்தம், டட்லி செல்லா ஒப்பந்தங்கள் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியான தாயகத்தினை ஏற்றுக்கொண்டே கைச்சாத்திடப்பட்டன. 

தமிழ் பேசும் மக்கள் தமது தாயகத்தில் தங்களைத் தாங்களே ஆளக்கூடியவர்களாக உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சுயாட்சி உடையவர்களாக வாழ்க்கூடிய சூழல் உருவாக்கப்படவேண்டும். இதனை எவரும் மறுக்க முடியாது.

இந்தியா, சுவிஸ்லாந்து, கனடா, போன்ற நாடுகளில் இந்த சுயாட்சி முறைமை நடைமுறையில் உள்ளது. இந்தியாவில் மொழி ரீதியான மானிலங்கள் உள்ளன.

இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமாராவின் சந்திப்பின்போது இடம்பெயர்ந்து நிரந்தரத் தொழிலின்றி, நிரந்தர இடமின்றி அல்லல்படும் மக்களுக்கு உதவவேண்டும் என வலியுறுத்தினோம்.

தமிழ் பேசும் மக்களின் சட்டபூர்வ அபிலாசைகளைப் புர்த்திசெய்யும் வகையிலான தீர்வுகள் காணப்பட Nவுண்டும் எனவும் வலியுறுத்தினோம். 

அதற்கு அவர் இலங்கையில் Nதுர்தல் நிறைவடைந்த பின்னர் அரசியல் திட்ட விடயங்கள் குறித்தும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்தும் இலங்கை அரசாங்கத்துடனும் தமிழ் அரசில் தலைவர்களுடனும் பேச்சுநடத்தவுள்ளதாகவும் தெரிவித்தார் எனவும் தெரிவித்துள்ளார்.

 

  • email Email to a friend
  • print Print version
Advertisement

Advertisement