தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு விசேட அடையாள அட்டைகள் வழங்க தேர்தல் செயலகம் நடவடிக்கை

Font size: Decrease font Enlarge font

 

வாக்கெண்ணும் நிலையங்களுக்கோ வாக்களிப்பு நிலையங்களுக்கோ தேர்தல்கள் செயலகத்தினால் விநியோகிக்கப்படும் விசேட அடையாள அட்டை இல்லாத வேட்பாளர்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என தேர்தல்கள் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார். செயலகம் விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மாவட்ட தேர்தல் அத்தியட்சகரூடாக தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளருக்கும் விரைவில் பிரத்தியேகமான அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன. இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட தேர்தல் அத்தியட்சகர்களிடம் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிவக்கப்பட்டுள்ளது.

தமது அரசியல் பலத்தினை பயன்படுத்தி வாக்கெண்ணும் நிலையங்களுக்கு வர முயற்சிக்கும் வேட்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார் கடும் உத்திரவிட்டுள்ளார்.


 

  • email Email to a friend
  • print Print version
Advertisement

Advertisement