இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக மோசடி வழக்கு: சரத்பொன்சேகா தொடர்ந்தார்

Font size: Decrease font Enlarge font
image

இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் 26-ந்தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இதில் ஆளும் கட்சி சார்பில் அதிபர் மகிந்த ராஜபக்சேவும், எதிர்க்கட்சிகளின் கூட்டணி வேட்பாளராக சரத் பொன்சேகாவும் போட்டியிட்டனர். இவர் இலங்கை ராணு வத்தின் முன்னாள் தலைமை தளபதி ஆவார். விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த போரில் வெற்றி பெற காரணமாக இருந்தவர்.
 
நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் அதிபர் ராஜபக்சே மூன்றில் 2 பங்கு அளவுக்கு சற்று குறைவாக அமோக வெற்றி பெற்றார். இதை எதிர்த்து சரத்பொன்சேகா கொழும்பு உயர்நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தார்.
 
இதில், Òவாக்குப்பதிவு எந்திரத்தில் ராஜபக்சே தில்லுமுல்லு செய்து விட்டார். தனக்கு கூடுதலாக வாக்கு கிடைக்கும்படி மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டார். எனவே அவரது வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும்ளு என்று தெரிவித்து இருந்தார்.
 
இந்த வழக்கு விசா ரணைக்கு ஏற்கப்பட்டது. அடுத்த விசாரணையை வருகிற செப்டம்பர் 13-ந் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர். அதிபர் ராஜபக்சேவை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக சரத்பொன் சேகா கைது செய்யப்பட்டு ராணுவ காவலில் வைக்கப் பட்டிருந்தார். தற்போது அவர் பாராளுமனற தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆக பதவி வகிக்கிறார்.

  • email Email to a friend
  • print Print version
Advertisement