நாடு கடந்த அரசைத் தடுக்க அரசியல் தீர்வு உடன் தேவை அரசாங்கத்துக்கு ஆலோசனை கூறுகிறார் ரணில்
புலம்பெயர் தமிழர்களால் அறிவிக்கப்பட்ட நாடு கடந்த தமிழீழ அர சைத் தடுத்து அதனைத் தோற்கடிப்பதாக இருந்தால், இந்நாட்டின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு உடனடியாக முன்வைக்கப்பட வேண் டும். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்று நாடா ளுமன்றில் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதிக் கும், தமிழ்த் தேசி யக் கூட்ட மைப் புக்கும் இடையிலான பேச்சுகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் சென்று ஓர் இணக்கப்பாட்டுக்கு வர முடியுமென்றால் அந்த நடவடிக்கைக்கு உதவ ஐ.தே.கட்சி தயாராக உள்ளது என்றும் அவர் சொன்னார்.
நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற வரவுசெலவுத் திட்ட மற்றும் அவ சரகாலச் சட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் இது தொடர்பாக மேலும் கூறி யவை வருமாறு:
நாடு கடந்த அரசு தொடர்பாக பிரதமர் இங்கு கூறினார். அந்த அரசைத் தோற் கடிக்க வேண்டும் என்றால் இந்த நாட்டில் அரசியல் தீர்வொன்று முன்வைக்கப்பட வேண்டும்.
பேச்சுக்குத் உதவத் தயார்
ஜனாதிபதிக்கும், தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கும் இடையில் நடந்த பேச்சுத் தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். இப்பேச்சுகள் தொடர்ந்து இடம்பெறவேண்டும். அப்பேச்சுகளின் அடிப்படையில் ஓர் இணக்கப்பாட்டுக்கு வரமுடிந்தால் நாம் அதற்கு உதவத் தயாராக இருக்கின்றோம்.
ஜனாதிபதி, பிரதமர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மற்றும் ஜனநாயக தேசியக் கூட்டமைப்பினர் ஆகியோருடன் புதிய அரசமைப்புத் தொடர்பாக பேசி இணக்கப்பாடொன்றுக்கு வந்து நாடாளுமன்றத்தில் பிரேரணை ஒன்றைக் கொண்டு வந்து வாக்கெடுப்பை நடத்துங்கள். ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தால் நாமும் அதை ஆதரிப்போம்.
மக்கள் மய அரசமைப்புத் தேவை
மக்கள்மய அரசமைப்பு ஒன்று கொண்டு வரப்படுவதையே நாம் விரும்புகிறோம். அதற்கு ஒத்துழைப்பு வழங்க நாம் தயார். ஆனால், குடும்பவாத அரசமைப்புக்கு நாம் ஆதரவு வழங்கமாட்டோம்.
இதுதொடர்பாக நாம் தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளோம். ஏனைய கட்சிகளுடனும் இதுபற்றிப் பேசி நாம் ஒரு முடிவுக்கு வருவோம்.
இதுதொடர்பில் அரசுக்கு எமது ஆதரவு தேவையில்லை என்று அமைச்சர்கள் சிலர் கூறுகின்றனர். தேவையில்லை என்றால் சொல்லுங்கள் நாங்கள் வேறு வழியைப் பார்த்துக்கொள்கிறோம் என்றார்



del.icio.us
Digg