வீரவன்சவின் உண்ணாவிரதம் அப்பட்டமான சாட்சியம்
“அரம்போலும் கூர்மையரேனும் மரம் போல் வர் மக்கட்பண்பில்லாதவர்”
என்பது வள்ளுவரின் முடிபு. பிற ஆயுதங்களை கூர்மையாக்கக் கூடிய அரத்தின் கூர்மை எத்துணை சிறப்பானதோ அது போன்றவர்கள் சீரிய அறிவுடையவர்கள். அவர்களிடம் சீரிய அறிவு இருந்தாலும் பண்பு இல்லையேல் அவர்கள் மரத்திற்கு ஒப்பானவர் கள் என்பது இதன் பொருளாகும்.
அதீதமான அறிவுடையவர்களாக இருந்தாலும் அவர்களிடம் பண்பில்லையாயின் அவர் கள் மரத்திற்கு இணையானவர்களெனில், அறிவும் இல்லாமல், பண்பாடும் தெரியாமல் இருப்பவர்களை எதற்கு ஒப்பிடலாம் என்று கேட்பதற்கு வள்ளுவர் உயிரோடில்லை. அத்தகையதொரு கேள்விக்கு வள்ளுவர் உயிரோடு இருந்தாலும் பதிலளிக்க முடியாதென் பதே எமது தாழ்மையான கருத்து. இந்தக் கருத்தை நாம் முன்வைப்பதற்கு விமல் வீரவன்சவே காரணமாக இருக்கின் றார். இலங்கையில் நடந்த போர்க்குற்றங் களை விசாரிப்பதற்கு ஐ.நா. சபை முயற்சி களை மேற்கொண்டிருக்கும்போது, கொழும்பி லுள்ள ஐ.நா.தூதரகத்திற்கு முன்பாக விமல் வீரவன்ச தலைமையிலான குழுவினர் ஆர்ப் பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டம் இலங்கையின் வளர்ச்சி குன்றிய பண்பாட்டை உலக நாடுகளுக்கு வெளிக்காட்டியது. இதற்குமேலாக இப்போது விமல் வீரவன்ச சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளார். வன்னி யுத்தத்தின்போது இராணுவத் தள பதியாக இருந்த ஜெனரல் சரத் பொன்சேகா, ஐ.நா.சபை மேற்கொள்ளும் விசாரணையை அரசு எதிர்கொள்ளவேண்டும் எனக் கூறுகிறார். போரின்போது ‘குற்றம்’ இடம்பெற வில்லை எனில் அச்சமின்றி, ஐ.நா.விசாரணைக் குழுவை எதிர்கொள்ள முடியும் என்பது அவரின் வாதம்.
யுத்தத்தின் போது இராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் சரத் பொன்சேகா இவ்விதம் கூற, விமல் வீரவன்ச சாகும்வரை உண்ணா விரதமிருப்பது எதற்காக?வன்னியுத்த வெற்றியில் தனக்கும் ஒரு பங்கை எடுத்துக் கொள்வதற்காகவா? எல்லாமே அறியாமையின் வெளிப்பாடு.
எல்லா நேரத்திலும் ஏமாற்றுவித்தை அரங்கேற மாட்டாது. சிலவேளைகளில் ஏமாற்று நாடகங்கள் செய்த குற்றங்களுக்கான அப்பட்ட மான சாட்சிகளாகவும் அமைந்துவிடுவது வழக்கம்.



del.icio.us
Digg