கப்பல்களை கடத்த முயன்ற கடற்கொள்ளையர் 35 பேர் கைது: பிரான்சு கடற்படை அதிரடி

Font size: Decrease font Enlarge font
image

சோமாலியாவை சேர்ந்த கடற்கொள்ளையர்கள் இந்திய பெருங்கடலில் பயணம் செய்யும் கப்பல்களை கடத்தி வருகின்றனர். அவற்றை சிறை பிடித்து செல்லும் அவர்கள் பெரிய அளவில் பிணைத்தொகை பெற்றுக் கொண்டு அக் கப்பலை விடுவிக்கின்றனர்.
 
இது பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே, ஐரோப்பிய யூனியன் கடந்த 2008-ம் ஆண்டு அட்லாண்டா மிஷன் என்ற அமைப்பை உருவாக்கியது.
 
அவர்கள் கடல் பகுதியில் ரோந்து சுற்றி வருகின்றனர். இவர்களுடன் அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு படை அமைப்பும் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
 
இந்த நிலையில், கடந்த 4 நாட்களாக பிரான்சு கப்பற்படை கொள்ளையர்களை பிடிக்க அதிரடி வேட்டை நடத்தினார்கள். அப்போது கப்பலை கடத்த முயன்ற 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
அவர்களால் கடத்தப்பட்ட 4 பெரிய கப்பல்கள், 6 சிறிய படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த தகவலை பிரான்சு கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • email Email to a friend
  • print Print version
Advertisement

Advertisement