“டீ” குடிக்கும் பெண்களுக்கு கர்ப்பபை புற்று நோய் வராது

Font size: Decrease font Enlarge font
image

டீ குடிக்கும் பெண்களுக்கு ஏற்படும் விளைவுகள் குறித்து வாஷிங்டன் பல்கலைக்கழகம் ஆய்வு மேற்கொண்டது. 2 ஆயிரம் பெண்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
 
அவர்களுக்கு பச்சை தேயிலையில் இருந்து தயாரிக்கப்பட்ட ஒன்றுக்கும் மேற்பட்ட “கப்” டீ பருக தினமும் வழங்கப்பட்டது.
 
அவர்களில் 54 சதவீதம் பேருக்கு புற்று நோய் ஏறபடுவது குறைந்து காணப்பட்டது. குறிப்பாக கர்ப்பபை புற்று நோய் பாதிப்பில் இருந்து அவர்கள் தப்பித்தனர்.
 
இதன் மூலம் டீ குடிக்கும் பெண்களுக்கு கர்ப்பபை புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவாக இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 
முந்தைய ஆய்வுகளின்படி டீ குடிப்பவர்களின் இதயம் பலப்படும், அவர்களின் அறிவுத்திறன் அதிகரிக்கும். அதே வேளையில் தேவையற்ற கேடு விளைவிக்கும் கொழுப்புகளை குறைக்கும் என்று தெரிய வந்துள்ளது.

மேலும் எலுமிச்சை இலைகளின் மூலம் தலைவலியை குணப்படுத்த முடியும் என்றும் புதிய ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அந்த இலைகளில் தலைவலியை குணப்படுத்தும் ஆஸ்பிரின் மருந்து குணம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • email Email to a friend
  • print Print version
Advertisement

Advertisement