தென் ஆப்பிரிக்கா தலைவர் நெல்சன் மண்டேலா மீது முன்னாள் மனைவி புகார் Òநாட்டை நாசமாக்கி விட்டார்ளு

Font size: Decrease font Enlarge font
image

தென் ஆப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலா மீது முன்னாள் மனைவி புகார் கூறியுள்ளார்தென் ஆப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டே லாவின் முன்னாள் மனைவி வின்னி மண்டேலா. 27 ஆண்டுகளாக ஜெயிலில் இருந்த மண்டேலா விடு தலையாகி வெளியே வந்ததும் கணவன்- னைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மண்டேலாவும் வின்னியும் 1996-ம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர்.
 
வின்னி மண்டேலா தற்போது லண்டனில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அங்கு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் மண்டேலா குறித்து பல்வேறு புகார்களை கூறினார்.
 
அவர் கூறியதாவது:-
 
மண்டேலா விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட காலத்தில் அவரை கறுப்பின மக்கள் மிகவும் நம்பினார்கள். அவரை வழிகாட்டியாக நினைத்தனர்.
 
ஆனால் அவர் விடுதலையானதற்கு பிறகு நம்பிக்கைக்கு உரிய நபராக நடந்து கொள்ளவில்லை. வெள்ளைக்காரர்களுடன் சில சமரசங்களை ஏற்படுத்தி கொண்டார்.
 
வெள்ளைக்காரர்கள் ஆட்சியில் இருக்கும்வரை தென் ஆப்பிரிக்க பொரு ளாதாரம் நன்றாக இருந்தது. ஆனால் இப்போது தென் ஆப்பிரிக்கா நசிந்து விட்டது. இதற்கு மண்டேலா ஆட்சிக்கு வந்ததும் சரியான திட்ட நடை முறைகளை கொண்டு வராததே காரணம்.
 
1993-ல் மண்டேலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கினார்கள். அவர் ஜெயிலில் இருந்த போது ஜெயில் அதிகாரியாக இருந்த டிகிளார்க்குடன் சேர்ந்து இந்த விருது வழங்கப்பட்டது. அவருடன் சேர்த்து இந்த விருதை வழங்கியதால் அதை ஏற்றுக் கொண்டது மண்டேலா செய்த பெரும் தவறு.
 
பெரிய தலைவரான மண்டேலா இப்போது கட்டுப்பாடு இழந்து செயல்படுகிறார். அவருடைய சில நடவடிக்கைகளால் நாடு நாசமாகிவிட்டது.
 
இவ்வாறு அவர் கூறினார்.

  • email Email to a friend
  • print Print version
Advertisement

Advertisement