பாகிஸ்தானில் மந்திரி மகனை சுட்டு கொன்ற தீவிரவாதிகள்

Font size: Decrease font Enlarge font
image

பாகிஸ்தானில் வடமேற்கு பகுதியில் ஹைபர்-பக்துன் ஹாவா மாகாணம் உள்ளது. மியான் இப்திகார் உசேன் இங்கு தகவல்துறை மந்திரியாக உள்ளார். இவரது மகன் மியான் ரஷீத் உசேன். இவர் நவ்ஷேரா மாவட்டத்தில் உள்ள பாப்பி என்ற நகரில் ரோட்டில் தனது நண்பருடன் சென்று கொண்டிருந்தார்.
 
அப்போது அங்கு வந்த தலிபான் தீவிரவாதிகள் இவரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில், துப்பாக்கி குண்டு பாய்ந்து ரஷித்உசேன் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார். அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
இச்சம்பவத்துக்கு சைபிர்-பக்துன் காவா மாகாண அசாமி தேசிய கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மந்திரி உசேன் தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக பேசி வந்தார். இதனால் அவருக்கு பல கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்தன.

  • email Email to a friend
  • print Print version
Advertisement