நித்யானந்தா மீது வழக்கு: கர்நாடக போலீசார் சென்னை வருகிறார்கள்
நித்யானந்தா மீதான வழக்குகள் கர்நாடக மாநிலத்துக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து பெங்களூர் போலீசார் விசாரணை நடத்த சென்னை வருகிறார்கள். சீடர் லெனின் கொடுத்த புகாரின் பேரில், நித்யானந்தா மீது சென்னையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை கர்நாடகாவுக்கு மாற்றி டி.ஜி.பி. லத்திகா சரண் உத்தரவிட்டுள்ளார்.
வழக்கு தொடர்பான ஆவணங்கள் கையில் கிடைத்தவுடன் பெங்களூர் போலீசார் சென்னை வருகிறார்கள். சாமியார் சி.டி.வெளியானது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
படுக்கை அறை காட்சிகளை படம் எடுக்க லெனினுக்கு யார்-யார் உதவி செய்தார்கள் இந்த சி.டி. வெளியானதன் பின்னணியில் இருப்பவர்கள் யார், என்பது குறித்தும் தகவல்களை திரட்ட போலீசார் முடிவு செய்துள்ளனர்.
லெனின் சொந்த ஊரான சேலம் ஆத்தூருக்கும் தனிப்படை போலீசார் செல்கிறார்கள். அப்போது லெனின் சிறு வயது பழக்க வழக்கங்கள் பற்றியும் காந்தப்படுக்கை மோசடியில் லெனின் சிக்கியது தொடர்பாகவும் விசாரணை நடத்துகிறார்கள்.
பெங்களூர் போலீசார் களத்தில் இறங்கி விசாரிக்கும் போது லெனின் தொடர்பாக மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



del.icio.us
Digg
