அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரி டாக்டர்களுக்கு கைரேகையுடன் நவீன அடையாள அட்டை தில்லுமுல்லுவை தடுக்க எம்.சி.ஐ. நடவடிக்கை

Font size: Decrease font Enlarge font
image

இந்தியா முழுவதும் 300 மருத்துவ கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அரசு மற்றும் தனியார் நடத்தும் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாக்டர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்
 
மருத்துவ கல்லூரிகளை இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.) ஆண்டு தோறும் ஆய்வு செய்து மாணவர் களை சேர்க்க அனுமதி வழங்குகிறது. கல்லூரிகளில் கட்டமைப்பு வசதி, போதுமான படுக்கைகள், ஆய்வ கங்கள், விடுதி வசதி, டாக்டர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
 
இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வின் போது மருத்துவ கல்லூரிகளில் பணியாற்றும் டாக்டர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் வேலை செய்வது தெரிய வந்தது. டாக்டர்கள் செய்யும் முறைகேட்டை தடுக்க இந்திய மருத்துவ கவுன்சில் புதிய யுக்தியை கையாள திட்டமிட்டுள்ளது.
 
மருத்துவ கல்லூரி மருத்துவ மனைகளில் பணி புரியும் டாக்டர்களுக்கு கைரேகையுடன் கூடிய அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பணிபுரியும் டாக்டர்களின் கைரேகையை பதிவு செய்து நவீன தொழில் நுட்பத்துடன் இந்த அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
 
டெல்லியில் உள்ள மத்திய கம்ப்யூட்டரில் டாக்டர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை குறியீட்டு எண் பதிவு செய்யப்படும். ஆள் மாறாட்டம், போன்றவற்றை தடுக்க புகைப்படத்துடன் அடையாள அட்டை வழங்க ஆலோசித்து வருவதாகவும் வரும் கல்வி ஆண்டில் இதை நடை முறைப்படுத்த இந்திய மருத்துவ கவுன்சில் முடிவு செய்திருப்பதாகவும் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • email Email to a friend
  • print Print version
Advertisement

Advertisement