நெல்- கரும்பு விளைச்சல் அமோகம்: அரிசி- சர்க்கரை விலை திடீர் சரிவு

Font size: Decrease font Enlarge font
image

தமிழ்நாட்டில் கடந்த மாதம் வரை சர்க்கரை விலை கிலோ ரூ.44-க்கு விற்கப்பட்டது. ஆனால் இப்போது “கிடு கிடு”வென சரிந்து கிலோ ரூ.34-க்கு விற்கப்படுகிறது.
 
மகாராஷ்டிரா, உத்தரபிரதேச மாநிலங்களில் கரும்பு விளைச்சல் அதிகமானதாலும், வெளிநாட்டுக்கு ஏற்றுமதி நிறுத்தப்பட்டதாலும் சர்க்கரை விலை குறைந்து வருவதாக தமிழ்நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.பி. சொரூபன் கூறினார்.
 
மத்திய அரசு அனைத்து மில்களுக்கும் இந்த மாதம் 16 லட்சத்து 8 ஆயிரம் டன் ஒதுக்கீடு செய்ததால் சர்க்கரை உற்பத்தி 1 1/2 கோடிடன் அதிகரித்துள்ளது. இதனால் சர்க்கரை விலை கிடு கிடு என சரிந்து வருவதாக அவர் கூறினார்.
 
இதேபோல் தமிழ்நாட்டில் நெல் விளைச்சல் அதிகமானதால் அரிசி விலை கிலோவுக்கு 2 ரூபாய் குறைந்துள்ளது
 
அதிசய பொன்னி புதுசு கிலோ ரூ.22-க்கு விற்பனையானது இப்போது ரூ.20-க்கு விற்கப்படுகிறது. பாபர்ட்லா அரிசி கிலோ ரூ.24-ல் இருந்து ரூ.22 ஆக குறைந்துள்ளது. ரூபாளி பொன்னி கிலோ ரூ.20-ல் இருந்து ரூ.18 ஆகவும் குச்சி ரக பொன்னி கிலோ ரூ.18-ல் இருந்து ரூ.16 ஆகவும் சிகப்பு பொன்னி கிலோ ரூ.19-ல் இருந்து ரூ.17 ஆகவும் குறைந்துள்ளது.
 
இதேபோல் இட்லி அரிசி புதுசு கிலோ ரூ.22-ல் இருந்து ரூ.18 ஆக குறைந்துள்ளது.
 
தமிழ்நாட்டில் நெல் விளைச்சல் அதிகமானது மட்டுமின்றி ஆந்திராவில் இருந்து தினமும் 200 லாரிகளில் நெல் வருவதால் அரிசி விலை மேலும் குறை யும் என்றும் சொரூபன் கூறினார்.

  • email Email to a friend
  • print Print version
Advertisement

Advertisement