விஜயேந்திர சாமிகள் 42-வது பிறந்த நாள்: ஜெயேந்திரருக்கு பாத பூஜை

Font size: Decrease font Enlarge font
image

காஞ்சீபுரம் சங்கர மடம் விஜயேந்திர சரஸ்வதி சாமிகளின் 42-வது ஜெயந்தி (பிறந்த நாள்) விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி இன்று அதிகாலை 5 மணிக்கு மகா பெரியவர் சமாதிக்கு ஜெயேந்திர சரஸ்வதி சாமிகள், விஜயேந்திர சரஸ்வதி சாமிகள் விஸ்வரூப தரிசனம் செய்து சிறப்பு பூஜை ஆராதனை நடத்தினர்.சந்திரமவுலீஸ்வரர் சன்னதியில் சிறப்பு ஆராதனை அபிஷேகம் நடை பெற்றது.
 
பின்னர் 10 மணிக்கு சிறப்பாக அமைக்கப்பட்ட பீடத்தில் ஜெயேந்திர சரஸ்வதி சாமிகளுக்கு கனகாபிஷேகத்தை (பாத பூஜை) விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நடத்தினார்.
 
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சங்கர மடத்தில் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

  • email Email to a friend
  • print Print version
Advertisement

Advertisement