இந்தியில் அர்ஜுன்
இந்திப் படங்களில் நடிக்க வேண்டும் என்பது அர்ஜுனின் நீண்ட நாள் கனவு. கனவுக்கு கை கொடுக்கும் விதமாக பொம்மலாட்டம் படத்தை சினிமா என்ற பெயரில் இந்தியில் எடுத்தார் பாரதிராஜா. துரதிர்ஷ்டம்... சினிமா இன்னும் திரையரங்குக்கு வரவில்லை.
தமிழில் படம் தயாரித்து இயக்கி நடிப்பது போல் விரைவில் இந்தியில் ஒரு படத்தை அர்ஜுன் தயாரித்து இயக்கி நடிப்பதாக பரவலாக பேசப்பட்டது. அதற்குமுன் இந்தி வாய்ப்பு ஒன்று அவரை தேடி வந்துள்ளது.
டினு வர்மா இயக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லரில் அர்ஜுன் ஹீரோவாக நடிக்கிறார். படத்துக்கு வீக்எண்ட் என பெயர் வைத்துள்ளனர்.
ஆக்சன் கிங் வடக்கேயும் வெற்றிக்கொடி நாட்ட வாழ்த்துவோம்.



del.icio.us
Digg
