முதல்வர் வ‌ரிக்கு ரஹ்மான் இசை

Font size: Decrease font Enlarge font

முதல்வர் அறிவித்துள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு தமிழறிஞர்களின் பங்களிப்பு எப்படியோ? தமிழ் திரைத்துறையினர் கச்சைகட்டி இறங்கியுள்ளனர். நாடகம் போடவா? நாட்டியம் ஆடவா? என்று முறுக்குவதைப் பார்த்தால் சிலிர்க்கிறது. தமிழ் மீது என்னே பாசம்.

பாடலாசி‌ரியரும் நடிகருமான பா.விஜய் மாநாட்டு பந்தலின் வடிவ மாதி‌ரிகளை வரைந்து காட்டி முதல்வ‌ரின் பாராட்டை எப்போதோ பெற்றுவிட்டார். செம்மொழி மாநாட்டில் அவருக்கு தமிழ் காத்த செம்மல் பட்டம் தரலாம். அந்தளவுக்கு உழைப்பு.

நமது இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் செம்மொழி மாநாட்டுக்கு பங்களிப்பு செலுத்துகிறார். இந்த மாநாட்டுக்கென்றே தமிழின் பெருமைகளை எதுகை மோனையில் அழகிய வ‌ரிகளாக்கியிருக்கிறார் முதல்வர். இந்த வ‌ரிகளுக்கு ரஹ்மான் இசையமைக்கிறார்.

எப்படி வந்தே மாதரம் இளைஞர்களை ஈர்த்ததோ அதே அளவுக்கு இந்தப் பாடலும் ஈர்க்கும் என்று உறுதியாக நம்பலாம். தமிழக முதல்வரும், இசை முதல்வரும் இணைந்து உருவாக்கும் பாடல் அல்லவா?

  • email Email to a friend
  • print Print version
Advertisement

Advertisement