ஷூட்டிங் பந்தயம்

Font size: Decrease font Enlarge font

ஏவி.எம். ஸ்டுடியோ நட்சத்திர பட்டாளங்களால் நிரம்பி வழிந்து‌க் கொண்டிருக்கிறது. காரணம் இரண்டு நாயகன்களின் படங்களும் அடுத்தடுத்த ஃப்ளோர்களில் படப்பிடிப்பு நடப்பதால்தான்.

ஒருபுறம் தனுஷ் நடிக்கும் மாப்பிள்ளை படம். மற்றொன்றில் விஜய் நடிக்கும் சுறா. இரண்டு படங்களும் மே மாதம் வர இருப்பதால் வேகமாக நடந்து வருகின்றன.

மாப்பிள்ளைப் படத்துக்காக பிரமாண்ட சண்டைக் காட்சிகளுக்காக, ஸ்டண்ட் நடிகர்களும், சுறாவுக்காக பாடல் காட்சி ஒன்றுக்காக நடன நடிகர்கள் என எங்கு பார்த்தாலும் ஜே..ஜே.. என்று கூட்டமாக உள்ளது.

படம் வெளியாகி ஓடுவதில்தான் போட்டி வரும் என்றால் இங்கே யார் படத்தை சீக்கிரம் முடிப்பது என்று ஒரு மெளனமான போட்டியும் ஏற்பட்டிருக்கிறது.

  • email Email to a friend
  • print Print version
Advertisement

Advertisement