தொடர்ந்து தலைமறைவு: “ராவணன்” படத்தில் ரஞ்சிதா காட்சி நீக்கம்?
மணிரத்னம் இயக்கும் “ராவணன்” படப்பிடிப்பு விறு விறுப்பாக நடக்கிறது. இதில் விக்ரம், அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய் நடிக்கின்றனர். பிரியாமணி, ரஞ்சிதா இருவரும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். பட வேலைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. சில வசனக்காட்சிகள் மட்டுமே பாக்கி உள்ளது. அதை ஓரிரு நாளில் முடித்து விட்டு ரிலீஸ் ஏற்பாடுகளில் இறங்க மணிரத்னம் திட்டமிட்டார்.
ரஞ்சிதாவால் அதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர் தலைமறைவாக இருப்பதால் படப்பிடிப்பை துவங்க முடிய வில்லை. ரஞ்சிதாவை படக் குழுவினரால் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. செல்போனை “சுவிட்ச் ஆப்” செய்துள்ளார். அவரால் பெருமளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்கின்றனர்.
ரஞ்சிதா இதுவரை நடித்த காட்சிகள் அனைத்தையும் வெட்டி நீக்கி விட்டு அவருக்கு பதில் வேறு ஒரு நடிகையை நடிக்க வைக்கலாமா? என்று மணிரத்னம் யோசித்து வருகிறார்.



del.icio.us
Digg
