இளைஞர்களே திருந்துங்கள்
நாளுக்கு நாள் கொள்ளை, கொலை, கற்பழிப்பு, பழிக்குப் பழி என இன்றைய இளைஞர்கள் திசைமாறிப் போவது ஏன்? அதற்கான தீர்வு என்ன என்பதை சொல்லும் ஒரு வித்தியாசமான படமாகவும், அறிவுரை சொல்லும் படமாகவும் தயாராகி வருகிறது 'கோணங்கிகள்' எனும் படம்.
ரஞ்சித், லோகேஷ், சுரேஷ், சுர்ஜித் நான்கு புதுமுகங்களோடு, சில முன்னணி நடிகர், நடிகைகளும் நடிக்கின்றனர். ஜில்லு என்ற பெண் நாயகியாக நடிக்கிறார்.
இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் காந்தி மார்க்ஸ். ஒளிப்பதிவு சக்திவேல், இசை டி.எஸ்.முரளி, ஜீ.ராதாகிருஷ்ணன் வசனத்தில் படத்தை தயாரிக்கிறார் எஸ்.பி.கண்ணன்.



del.icio.us
Digg
