கல்லூரியில் காதலி
சில வருடங்களாய் பேரரசு இயக்கி இசையமைக்கும் படம் திருத்தணி. சுனேனா நாயகியாகவும், பரத் நாயகனாகவும் நடிக்கும் படம். தம்பிக்கு இந்த ஊரு படத்துக்கு முன்பே வெளியாகி இருக்க வேண்டும். இப்படத்தின் தாமதத்தால் அடுத்தடுத்த படகளில் நடிக்கப் போய்விட்டார் பரத்.
நவீன் ராஜ்குமார் இயக்கத்தில் மோதல் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் பரத். இதுவும் ஒரு காதல் படம்தான். தான் காதலிக்கும் பெண்ணை அவர் குடும்பத்திலிருந்து காப்பாற்றி இணைவதுதான் மெயின் தீம்.
பெங்களூருவில் படப்பிடிப்பைத் தொடங்கி, பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து நடைபெற இருக்கிறது. பரத்துக்கு ஜோடியாக்க மும்பை கல்லூரிகளில் தேடி வருகின்றனர்.



del.icio.us
Digg
