இலங்கையில் ஆவி
நானே வருவேன் என்றொரு திகில் படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இளம்பெண்ணை நான்கைந்து நண்பர்கள் கற்பழித்து கொலை செய்துவிட்டு யாருக்கும் தெரியாமல் அப்பெண்ணை புதைத்து விடுகின்றனர். இறந்த பெண் ஆவியாக வந்து அவர்களை எப்படி பழி வாங்குகிறது என்பதுதான் கதை.
ஆவி வேடத்தில் வகிதா எனும் புதுமுகம் நடிக்கிறார். நண்பர்களாகவும் புதுமுகங்களே நடிக்கின்றனர். இப்படத்தில் ஹீரோவாக நடிப்பதுடன் படத்தையும் இயக்குகிறார் பாபு கணேஷ்.
மேலும் விக்டோரியா, ஷில்பாவுடன் ஸ்ரீமன், சின்னி ஜெயந்த், டாக்டர் சீனிவாசன் ஆகியோர் நடிக்கின்றனர். பெரும்பாலான பகுதிகளை இலங்கையில் எடுத்துள்ளனர்.



del.icio.us
Digg
