உண்மைச் சம்பவம் சினிமாவாகிறது
கோவை குண்டுவெடிப்பு சம்பவம் சத்தமே இல்லாமல் திரைப்படமாக தயாராகிக் கொண்டிருக்கிறது. குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்து பல ஆண்டுகள் ஆனாலும், இன்னும் அதன் தாக்கம் குறையவில்லை.
எனவே அதையே கதையாக வைத்து 'கோட்டை மேடு' என்ற படத்தை இயக்கப் போவது வேறு யாருமல்ல... அந்த வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்ட ராஜன் என்பவர்.
ஆவணப் படமா...? என்றால், இல்லை அதிரடிப் படம் என்கிறார். இப்படம் வெளியானால் பல அரசு அதிகாரிகள் பதில் சொல்ல வேண்டியது இருக்கும் என்கிறார் ராஜன். கோவை கோட்டை மேடு குண்டுவெடிப்பு நடந்த இடம் என்பதால் அதைப்போலவே ஒரு அரங்கத்தை அமைத்திருக்கின்றனர்.



del.icio.us
Digg
