வடசென்னையில் அரசு முத்திரை இல்லாத எடை அளவுகள் பறிமுதல்; அதிகாரிகள் நடவடிக்கை

Font size: Decrease font Enlarge font
image

 சென்னை, தொழிலாளர் ஆணையர் சுகுமாரன் உத்தர வின் பேரில் தொழிலாளர் இணை ஆணையர் மதன் மோகன், துணை ஆணையர் கலைவாணி ஆகியோரின் அறிவுரையின் பேரில் சட்ட முறை எடை அளவு கட்டுப்பாட்டு அதிகாரி ரவிச்சந்திரன் மேற்பார் வையில் சென்னை முதல் வட்ட தொழிலாளர் ஆய்வாளர் வீரப்பன் தலைமையில் வட சென்னையில் ஏழுகிணறு, அங்கப்ப நாயப்பன் தெரு, கொத்தவால் சாவடி, பழைய வண்ணாரப்பேட்டை, மற்றும் புதிய வண்ணாரப் பேட்டை ஆகிய இடங்களில் உள்ள காய்கறி, பழங்கள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் மார்க் கெட்டுகளில் திடீர் ஆய்வு நடத்தப்பட்டது.
 
தொழிலாளர் துணை மற்றும் உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், கிருஷ்ணன் சேதுமாதவன், அங்கமுத்து, உதயகுமார், ரஞ்சனா, மணி மேகலை, நாககுமார், அந் தோணியம்மாள், ஹேமா, விஜயலட்சுமி மற்றும் சம்சத் பேகம் ஆகியோர் ஆய்வில் ஈடுபட்டனர்.
 
அப்போது எடைஅளவு கள் சட்டத்தின் கீழ் ஓராண்டு மற்றும் இரண்டாண்டு களுக்கு ஒரு முறை முத்திரையிடாமல் வியாபாரத்தில் பயன்படுத்திய 38 இரும்பு எடை கற்கள், 7 அளவைகள், 26 மேஜை தராசுகள், 3 விட்ட தராசுகள் மற்றும் ஒரு மின்னணு தராசு ஆகிய வைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
 
இந்த தகவலை சென்னை, முதல் வட்ட தொழிலாளர் ஆய்வாளர் வீரப்பன் தெரிவித்தார்.

  • email Email to a friend
  • print Print version
Advertisement

Advertisement