தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 உயர்ந்தது

Font size: Decrease font Enlarge font
image

 தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது. நேற்று தங்கம் விலையில் வீழ்ச்சி காணப்பட்டது. இன்று திடீரென விலையேற்றம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.1,569 ஆக இருந்தது. பவுன் ரூ.12,552-க்கு விற்பனை ஆனது.
 
நேற்று தங்கம் விலை குறைந்தது. ஒரு கிராம் தங்கம் 5 ரூபாய் குறைந்து ரூ.1,564 ஆக விற்பனையானது. இதனால் பவுன் ரூ.12,512 ஆக இருந்தது.
 
இன்று காலை தங்கம் விலை உயர்ந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.1,579-க்கு அதிகரித்தது. இதனால் பவுனுக்கு ரூ.120 உயர்ந்தது. ஒரு பவுன் தங்கம் ரூ.12,632-க்கு விற்கப்பட்டது.
 
பொங்கல் சீசன் என்பதால் தங்கம் விலை தொடர்ந்து உயரும் என்று தெரிகிறது.

  • email Email to a friend
  • print Print version
Advertisement

Advertisement