பொள்ளாச்சி மார்க்கெட்டில் வாழை இலை விலை உயர்வு; கட்டு 800 ரூபாய்க்கு விற்பனை
பொள்ளாச்சியில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன. வாழைத்தார் வாரத்தில் புதன் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஏலம் விடப்படுகிறது. அப்போது வாழை இலைகளும் ஏலம் விடப்படும்.
உள்ளூர் கிராம பகுதிகள் மட்டுமின்றி வெளி மாவட்டங்களான தஞ்சை, கிருஷ்ணகிரி, துத்துக்குடி மற்றும் பல இடங்களில் இருந்து செவ்வாழை, நேந்திரம், பூவன் போன்ற வாழைத்தார்கள் விற்பனைக்கு வருகின்றன. கடந்த சில மாதங்களாக ஆங்காங்கே சூறாவளி காற்று வீசியதில் அதிகபடியான வாழைகள் சாய்ந்தன. இதன் காரணமாக மார்க்கெட்டுக்கு வாழைத்தார் வரத்து மிகவும் குறைந்தது. 5 ஆயிரம் வாழைத்தார் விற்பனைக்கு வரும் மார்க்கெட்டில் ஏல நாளான நேற்று 300 வாழைத்தார்களே வந்திருந்தன.
மேலும் வாழை இலை வரத்தும் மிகவும் குறைந்ததால் அதன் விலை கிடுகிடுவென உயர்ந்தது. ஒரு வாழைத்தார் ரூ.250 முதல் ரூ.600 வரை ஏலம் போனது. அதேபோல் வாழை இலை 1 கட்டு ரூ.800 வரை ஏலம் போனது.
பொள்ளாச்சி காந்தி மார்க்கெட் மற்றும் தேர்நிலை மார்க்கெட்டுக்கு வாழைத்தார் இலைகட்டு வரத்து குறைந்ததால் கேரளாவுக்கு ஏற்றுமதி யாவது மிகவும் குறைவாக காணப்படுகிறது.



del.icio.us
Digg