தங்கம் விலை சரிவு; 2 நாளில் ரூ. 216 குறைந்தது
தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. 2 நாளில் பவுனுக்கு ரூ. 216 குறைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஜெட்வேகத்தில் உயர்ந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தங்கத்தின் விலை சரிய தொடங்கியுள்ளது.
நேற்று முன்தினம் ஒரு பவுன் தங்கம் ரூ. 14 ஆயிரத்து 104-க்கு விற்கப்பட்டது. நேற்று பவுனுக்கு ரூ. 152 குறைந்து ரூ. 13 ஆயிரத்து 952-க்கு விற்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று மீண்டும் தங்கத்தின் விலையில் சரிவு ஏற்பட்டது. பவுனுக்கு ரூ. 64 குறைந்து ரூ. 13 ஆயிரத்து 888 ஆக உள்ளது.
ஒரு கிராம் ரூ. 1736-க்கு விற்கப்படுகிறது. கடந்த 2 நாளில் தங்கம் பவுனுக்கு ரூ. 216 குறைந்துள்ளது. இது நடுத்தர மக்களிடையே சிறிது மனஆறுதலை தந்துள்ளது.
இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ. 30 ஆயிரத்து 35 ஆகவும், ஒரு கிராம் ரூ. 32-15க்கு விற்கப்படுகிறது.



del.icio.us
Digg