மரபணு கத்தரிக்காய்க்கு தடை: ஆந்திர விவசாயிகள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
மரபணு கத்தரிக்காயில் கிரை 1 ஏசி என்ற வைரஸ் சேர்க்கப்பட்டு உருவாக்கப்படுவதால் அது விஷத்தன்மை உடையதாக மாறி விடுகிறது. இக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் புற்று நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக டாக்டர்கள் எச்சரித்தனர்.
மேலும் மரபணு காய்கறிகளில் உள்ள விஷமானது மனித உடல் நலத்துக்கு பல்வேறு தீங்குகளை விளை விக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டது. மரபணு பயிர்கள் பயிரிடப்பட்ட பகுதிகளில் புதுபுது வைரஸ் காய்ச்சல் பரவி வருவதும், ஏராளமானோர் ஜலதோஷம், ஆஸ்துமா, சிறுநீரக கோளாறு, மூட்டுவலி போன்றவற்றால் அவதிப்படுவதும் அதிகரித்தது. இதனால் பயந்து போன 40க்கும் மேற்பட்ட நாடுகள் மரபணு பயிர்களுக்கு தடை விதித்துள்ளது. அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த மான் சான்டோ மரபணு விதை நிறுவனம் இந்தியாவில் கால்பதிக்கத் திட்டமிட்டது. இதற்காக சர்வதேச தரகர்கள் மூலம் மரபணு கத்தரிக்காய், அரிசி, முட்டைக்கோஸ் போன்றவை மூலம் காய் நகர்த்த தொடங்கியது.
இதன் பயனாக மரபணு பொறியியல் அங்கீகார குழு இந்தியாவில் மரபணு கத்தரிக்காய் பயிரிட ஒப்புதல் அளித்தது.
இதற்கு விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள், மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மரபணு பயிர்களை அனுமதித்தால் விதைகளுக்கு அமெரிக்க நிறுவனமான மான்சான் டோவையே சாந்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். அந்நிறுவனம் விதைகளை மிக அதிக விலைக்கு விற்று வருகிறது.
மேலும் அப்பயிர்களை பயிரிடும் நிலமும் நாசமாகி விடும். எனவே மரபணு பயிர்களை நம் நாட்டில் பயிரிட அனுமதிக்க கூடாது என்று ஆந்திர விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர் போராட்டத்திலும் குதித்தனர்.
இந்நிலையில் நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் மரபணு கத்தரிக்காய்க்கு தடை விதிப்பதாக நேற்று மாலை மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ் திடீரென அறிவித்தார். அவர் முன் கூட்டியே இந்த அறிவிப்பை வெளியிட்டதற்கு சென்னை ஐகோர்ட்டில் நடைபெறும் மரபணு பொறியியல் அங்கீகார குழு மீது போடப்பட்ட பொது நல வழக்கு தான் காரணம் என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். ஐகோர்ட்டு, மத்திய அரசு மரபணு கத்த ரிக்காய்க்கு ஒப்புதல் அளித்த பொறியியல் குழுவில் உள்ள விஞ்ஞானிகள் பற்றி விளக்கம் கேட்டிருக்கிறது.
மரபணு கத்தரிக்காய்க்கு தடை விதிக்கப்பட்டதால் ஆந்திர விவசாயிகள் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். அவர்கள் கூறும் போது, நம் நாட்டில் மரபணு கத்தரிக்காய் மட்டுமின்றி அனைத்து வகையான மரபணு பயிர்களுக்கும் தடை விதிக்க வேண்டும். அதுவரை தொடர்ந்து போராடுவோம் என்றனர்.



del.icio.us
Digg
