பார்முலா-1 பந்தயத்தில் இடம் என் வாழ்நாள் கனவு நிறைவேறி இருக்கிறது கருண் சந்தோக் பேட்டி

Font size: Decrease font Enlarge font
image

உலகில் உயர்ந்த கார் பந்தயமான பார்முலா-1 கார் பந்தயத்தில் முதன் முதலில் தமிழக வீரர் நரேன் கார்த்திகேயன் இடம் பெற்றார். இப்போது மற்றொரு வீரர் கருண் சந்தோக்குக்கு இடம் கிடைத்துள்ளது.
 
அவர் ஹிஸ்பானியா அணியில் இடம் பெற்று இருக்கிறார். பார்முலா-1 பந்தயத்தில் இந்த சீசனின் முதல் போட்டி வருகிற 14-ந்தேதி பக்ரைனில் நடக்கிறது. இதில் கருண் சந்தோக் பங்கேற்பார்.
 
பார்முலா-1 பந்தயத்தில் இடம் கிடைத்தது குறித்து அவர் கூறியதாவது:-
 
நான் கார் பந்தயத்தில் கலந்து கொள்ள தொடங்கியதுமே எப்படியாவது பார்முலா-1 பந்தயத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இது எனது வாழ்நாள் கனவாக இருந்தது. இப்போது இந்த கனவு நிறைவேறி இருக்கிறது. இதனால் தாங்க முடியாத மகிழ்ச்சியில் இருக்கிறேன்.
 
இந்த போட்டியில் முழு திறமையை பயன்படுத்துவேன். தொழில்நுட்ப ரீதியாக எங்கள் அணிவலுவாக உள்ளது. எனவே நல்ல முறையில் சாதிக்க முடியும் என கருதுகிறேன். முதல் 4 போட்டிகள் கொஞ்சம் கடினமாக இருக்கும். இதில் நல்ல முறையில் வந்து விட்டால் அடுத்த போட்டிகள் சாதகமாக இருக்கும் என கருதுகிறேன்.
 
உலகின் முன்னணி வீரர்கள் ஷூ மேக்கர், அலோன்சா போன்றவர்களுடன் போட்டிகளில் பங்கேற்பது மிகவும் சந்தோஷத்தை தருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

  • email Email to a friend
  • print Print version
Advertisement

Advertisement