சென்னை போட்டி: ஐ.பி.எல். டிக்கெட்டுகள் பிளாக்கில் விற்பனை
சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 14-ந்தேதி நடக்கிறது. சென்னை சூப்பர்கிங்ஸ் - டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்கான டிக்கெட் விற்பனை ஏற்கனவே தொடங்கி விட்டது. “ஆன்லைன்” மூலமும் விற்கப்பட்டு வந்தன.
இவற்றில் ரூ.1500, ரூ.1000, ரூ.500, ரூ.200 ஆகிய டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன. ரூ.3 ஆயிரம், ரூ.600 டிக்கெட்டுகள் மட்டும் கொஞ்ச அளவு உள்ளன.
எனவே டிக்கெட்டுகள் கிடைக்காதவர்கள் எப்படி யாவது டிக்கெட்டை பெற வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள்.
ஏற்கனவே டிக்கெட் வாங்கி வைத்திருக்கும் சிலர் இதை சாதகமாக பயன்படுத்தி தங்களுடைய டிக்கெட்டை கூடுதல் விலைக்கு பிளாக்கில் விற்று பணம் சம்பாதிக்கின்றனர்.
“ஆன்லைன்” மூலம் டிக்கெட் எடுத்த ஒருவர் இதுபற்றி கூறும்போது நான் 10 டிக்கெட்டுகள் எடுத்து வைத்து இருந்தேன். டிக்கெட் தேவை அதிகரித்து இருப்பதை அறிந்து நான் 3 டிக்கெட்டை கூடுதல் விலைக்கு விற்று ரூ.3 ஆயிரம் சம்பாதித்து விட்டேன் என்றார்.



del.icio.us
Digg
