பாராளுமன்றத்தில் 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் உமாபாரதி கோரிக்கை

Font size: Decrease font Enlarge font


நாகபுரி, ஜுலை. 2-

மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரியும், பாரதீய ஜனசக்தி கட்சி தலைவருமான உமா பாரதி, நேற்று நாகபுரியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை சந்தித்து பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ``பாராளுமன்றத்திலும், சட்ட மன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு போதாது., 50 சதவீத இட ஓதுக்கீடு அளிக்க வேண்டும். இந்த கோரிக்கையை வற்புறுத்தி டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்த போகிறேன்'' என்றார்.

அவர் மேலும் கூறுகையில், ``பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை, 5 தேர்தல்கள் வரையாவது அமல்படுத்த வேண்டும். பெண்களுக்கு என்று ஒதுக்கப்படும் தொகுதிகள், ஒவ்வொரு தேர்தலிலும் மாற்றப்பட வேண்டும்'' என்று குறிப்பிட்டார்.

 

  • email Email to a friend
  • print Print version
Advertisement