முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை: கேரள குழுவினர் பிரதமரை சந்திக்கிறார்கள் அச்சுதானந்தன் தலைமையில் டெல்லி செல்கிறார்கள்
திருவனந்தபுரம், ஜுலை 2-
தமிழக எல்லையை யொட்டி, கேரளாவுக்குள் முல்லை பெரியாறு அணை இருக்கிறது. இந்த அணையில் இருந்து தமிழ்நாட்டுக்கு விவசாயத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த அணையின் உயரத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தினால், தமிழ்நாட்டுக்கு கூடுதல் தண்ணீர் கிடைக்கும். எனவே அணையின் உயரத்தை அதிகரிக்க வேண்டும் என்று தமிழகம் கோரி வருகிறது.
ஆனால், 112 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த அணை மிகவும் பலவீனமாக இருக்கிறது என்றும், எனவே அணையின் உயரத்தை அதிகரிக்க முடியாது என்றும் கேரளா கூறி வருகிறது. இது தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த நிலையில், முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை பற்றி பிரதமரிடம் பேச, கேரள முதல்-மந்திரி அச்சுதானந்தன் தலைமையில் ஒரு குழுவினர், திருவனந்த புரத்தில் இருந்து டெல்லி செல்கிறார்கள். இந்த குழுவினர் டெல்லி செல்லும் தேதி இன்னும் முடிவாக வில்லை. குழுவில் இடம் பெறுவோர் யார்-யார்? என்பதும் முடிவு செய்யப்பட வில்லை.



del.icio.us
Digg