பிலிப்பெட் தொகுதியில் வருண்காந்தியின் வெற்றியை எதிர்த்து வழக்கு காங்கிரஸ் வேட்பாளர் தொடர்ந்தார்
அலகாபாத், ஜுலை.2-
உத்தரபிரதேச மாநிலம் பிலிப்பெட் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர், வருண்காந்தி. மறைந்த சஞ்சய்காந்தியின் மகனான இவரது வெற்றி செல்லாது என்று அறிவிக்க கோரி, உத்தரபிரதேச மாநில ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
இந்த வழக்கை, வருண்காந்தியை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வி.எம். சிங் தொடர்ந்து இருக்கிறார். வழக்கில் அவர், ``குறிப்பிட்ட ஒரு மதத்தினரை வருண்காந்தி தாக்கி பேசி இருக்கிறார். மதவாத உணர்வுகளை தூண்டிவிட்டு, வருண்காந்தி வெற்றி பெற்று இருக்கிறார். இது மக்கள் பிரதிநித்துவ சட்டம் எண் 123 (3) படி தவறாகும். எனவே, வருண்காந்தி வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க வேண்டும்'' என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டு உள்ளது.



del.icio.us
Digg