அரசுக்கு ஜாதிக ஹெல உறுமய எச்சரிக்கை

Font size: Decrease font Enlarge font

அரசாங்கம் அதிகாரப் பகிர்வுக்கு இடமளிக்குமாயின் அரசிலிருந்து விலக வேண்டி ஏற்படும் என ஜாதிக ஹெல உறும எச்சரித்துள்ளது.

13ஆவது மற்றும் 17ஆவது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் தேவையற்றது என தெரிவித்துள்ள அக்கட்சியின் உறுப்பினரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க இலங்கை வாழ் தமிழர்களுக்கு உணவு, சமூக மதிப்பு போன்ற பிரச்சினைகள் மட்டுமே இருப்பதாக கூறினார்.

இலங்கையில் தமிழர்களுக்கு வேறெந்த பிரச்சினைகளும் இல்லாமையினால், அதிகார பகிர்வு அவசியமற்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

  • email Email to a friend
  • print Print version
Advertisement