விமானத்தில் ஆடைகளை கழற்றி விட்டு பயணம் செய்த பயணி கைது

Font size: Decrease font Enlarge font



அமெரிக்காவில் வடக்கு கரோலினாவில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு 148 பயணிகளுடன் புறப்பட்ட விமானத்தில் பயணம் செய்தவர் கெய்த் ரைட். 50 வயதான இவர் நிïயார்க் நகரை சேர்ந்தவர் ஆவார். அப்போது அவர் தன் உடைகளை களைந்து விட்டு நிர்வாணமாக உட்கார்ந்து இருந்தார். இதை கவனித்த விமானப் பணிப்பெண், அவரிடம் சென்று உடைகளை அணிந்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். இதற்கு அவர் செவி சாய்க்கவில்லை. இதனால், அவர் மீது ஒரு போர்வையை போர்த்தி விட்டார்.

அவர் அந்த போர்வையை தூக்கி வீசி விட்டு மீண்டும் நிர்வாணமானார். இதை பார்த்த அந்த விமானப் பணிப்பெண், அவருக்கு மீண்டும் போர்த்தி விட முயன்றபோது அவர் அந்த பெண்ணை காலால் எட்டி உதைத்தார். கைகளால் அறைந்தார்.

இதை தொடர்ந்து விமானப் பணிப்பெண், விமானத்தில் பயணம் செய்த 2 போலீஸ் அதிகாரிகள் உதவியுடன் அவர் கைகளில் விலங்கு பூட்டினார். அதோடு போர்வையையும் போர்த்தி விட்டார்.

பிறகு விமானம் அவசரமாக வழியில் உள்ள ஒரு நகரில் தரை இறங்கியது. அங்கு அவர் ஆஸ்பத்திரியில் பரிசோதனைக்காக சேர்க்கப்பட்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 

  • email Email to a friend
  • print Print version
Advertisement