டாய்லெட்டில் அதிகநேரம் இருந்த மனைவியை தவிக்க விட்டு விட்டு நாடு திரும்பிய புதுமாப்பிள்ளை

Font size: Decrease font Enlarge font


சவுதிஅரேபியாவை சேர்ந்த புதுமண தம்பதிகள் தேனிலவுக்காக மலேசியாவுக்கு சென்றனர். தேனிலவை முடித்துவிட்டு தாய்நாட்டுக்கு திரும்புவதற்காக அவர்கள் விமானநிலையத்துக்கு வந்தனர். விமானத்தில் ஏறுவதற்காக காத்து இருந்தபோது, மணப்பெண் டாய்லெட்டுக்கு சென்றார். அங்கு இருந்து திரும்ப வெகுநேரம் ஆனது. அவர் கடைசியாக திரும்பி வந்தபோது, அவர் கணவர் அவரை விட்டுவிட்டு விமானத்தில் ஏறி சவுதி திரும்பி விட்டார்.

தன் சொந்த நாட்டுக்கு திரும்பிய அவர் அங்கு தன் உறவினர்களிடம் மனைவி மலேசியாவிலேயே இருப்பதாக கூறினார்.

கணவனை பல இடங்களிலும் தேடிப்பார்த்து ஏமாந்து போன மணப்பெண், ஒருவழியாக தன் சொந்தநாட்டுக்கு திரும்பினார். அவர் இப்போது தன் கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.

 

  • email Email to a friend
  • print Print version
Advertisement