வேறுபாடுகளை ஒதுக்கி தள்ளுங்கள் ஒபாமாவுக்கு ரஷிய அதிபர் வேண்டுகோள்
மாஸ்கோ, ஜுலை.3-
கடந்த கால அதிகாரப்போட்டியையும், கருத்து வேறுபாடுகளையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு உலக பொருளாதார பிரச்சினைகளை தீர்ப்பதில் ஒன்றுபட்டு உழைக்கவேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை ரஷிய அதிபர் மெட்வடேவ் கேட்டுக்கொண்டார்.
ஒபாமா முதல் முறையாக ரஷியாவுக்கு அடுத்த வாரம் வர இருக்கிறார். இந்த இரு தலைவர்களும் மாஸ்கோவில் சந்தித்து பேசுகையில் ஆயுதக்கட்டுபாடு தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யார் கஷ்டப்படுகிறார் என்பதை கண்டுபிடிப்பதற்கான நேரம் இது அல்ல. இது கூட்டு முயற்சிக்கான நேரம் ஆகும். உலக நாடுகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக நம் உறவை மேம்படுத்திக்கொள்ளவேண்டும் என்று மெட்வடேவ் கூறினார்.



del.icio.us
Digg