இந்தியப்பெண்ணை இனரீதியாக அவமானப்படுத்திய கவுன்சிலர் சஸ்பெண்டு
பிரிஸ்டல், ஜுலை.3-
இங்கிலாந்து நாட்டில் பிரிஸ்டல் நகரில் நகரசபை கூட்டத்தில் ஷெர்லி பிரவுன் என்ற உறுப்பினர் சக கவுன்சிலரான இந்திய வமிசாவளியை சேர்ந்த ஜே ஜெத்வா என்ற பெண்ணை தேங்காய் என்று அழைத்து நீங்கள் உங்கள் கலாசாரம் பண்பாடு ஆகியவற்றை விற்று விட்டீர்கள் என்று கேலி செய்தார். (தேங்காய் என்ற சொல் சிறுபான்மையினரை குறிப்பதற்கு பயன்படுத்தப்படும் கேலி சொல் ஆகும்)
சிறுபான்மையினருக்கு உதவுவதற்காக அமைக்கப்பட்ட கமிஷனுக்கு அளித்து வரும் நிதியை கன்சர்வேடிவ் கட்சி குறைத்து வருவதாக குற்றஞ் சாட்டப்பட்டது. இது தொடர்பான விவாதத்தில் பேசிய போது தான் அவர் இப்படி கூறினார்.
தேங்காய் என்ற சொல்லை அவர் கூறியதும் இதற்கு மற்ற உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதை தொடர்ந்து அவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். இருந்த போதிலும் அவருக்கு கவுன்சில் தண்டனை விதித்தது. அவர் ஒரு மாதம் கவுன்சில் கூட்டங்களில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டது.



del.icio.us
Digg