இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் யாழ் அலுவலகத்திற்குப் பாராட்டு
இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கிளைக்காரியாலயம் ஒன்றினை யாழ்ப்பாணத்தில் அமைப்பதற்கான நடவடிக்கைகளில் இந்திய அரசாங்கம் ஈடுபட்டுள்ளமை குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் இந்த விடயம் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் பேச்சு நடத்தியதாகவும் அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
யாழ் மக்களின் நலன் கருதி இந்த பிரதிநிதி நஷகாரியாலயம் அமைக்கப்படுவதானது பல்வேறுபட்ட நன்மைகளை இப்பிரதேச மக்களுக்கு ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காரியாலயம் மூலம் தமிழகத்துக்கும் இலங்கையின் வட பிரதேசத்திற்குமிடையிலான தொடர்பு மேலும் வலுப்படும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
