முகப்பு | செய்திகள் | தமிழ்நாடு | அ.தி.மு.க. மகளிர் அணியில் நடிகை சி.ஆர்.சரஸ்வதிக்கு துணை செயலாளர் பதவி; ஜெயலலிதா அறிவிப்பு

அ.தி.மு.க. மகளிர் அணியில் நடிகை சி.ஆர்.சரஸ்வதிக்கு துணை செயலாளர் பதவி; ஜெயலலிதா அறிவிப்பு

image

அ.தி.மு.க. மகளிர் அணி துணைச்செயலாளராக நடிகை சி.ஆர்.சரஸ்வதி நியமிக்கப்பட்டுள்ளார்.  அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
 
அ.தி.மு.க. மகளிர் அணி துணைச்செயலாளர் பொறுப்பில் தலைமைக் கழக பேச்சாளர் நடிகை சி.ஆர்.சரஸ்வதி இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.
 
இது போல் தலைமைக்கழக பேச்சாளர் திருப்பூர் விசாலாட்சியும் மகளிர் அணி துணைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
 
அ.தி.மு.க.வினர் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.