விவாகரத்து வழக்கு செல்வராகவன்-சோனியாஅகர்வால் கோர்ட்டில் ஆஜர்
விவகாரத்து வழக்கில் இயக்குனர் செல்வராகவன், அவரது மனைவி சோனியா அகர்வால் ஆகியோர் இன்று கோர்ட்டில் நேரில் ஆஜரானார்கள்.
செல்வராகவன் இயக்கிய “காதல் கொண்டேன்” படத்தில் நடிகை சோனியா அகர்வால் கதாநாயகியாக நடித்தார். அப்போது இரு வருக்கும் காதல் ஏற்பட்டது. அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணமான சில மாதங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அவர்கள் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் இருவரும் விவாகரத்து கேட்டு குடும்ப நல கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இருவரும் சம்மதித்து பிரிவதாக மனுவில் கூறியிருந்தனர்.
இந்த வழக்கு இன்று குடும்ப நல நீதிபதி ராமலிங்கம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இயக்குனர் செல்வராகவனும், நடிகை சோனியா அகர்வாலும் கோர்ட்டில் ஆஜரானார்கள்.
இந்த வழக்கில் வருகிற 12-ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி ராமலிங்கம் கூறினார்.
