முகப்பு | திரையுலகம் | புதிய பறவை ஏற்படுத்திய புதிய திட்டம்

புதிய பறவை ஏற்படுத்திய புதிய திட்டம்


எம்‌.ஜி.ஆர்., சிவா‌ஜி நடித்த பழைய படங்கள் அவ்வப்போது பெரும் பரபரப்புடன் விளம்பரத்துடன் திரையிடப்படுவதும், சத்யரா‌ஜ் போன்ற விசி‌‌‌றிகள் ரசிகர்களுடன் விசிலடித்து படத்தை ரசித்து பத்தி‌ரிகைகளில் பேட்டியளிப்பதும் வாடிக்கையானதுதான்.

சென்ற வாரம் சிவா‌ஜியின் சாந்தி திரையரங்கில் சிவா‌ஜி நடித்த புதிய பறவை படம் திரையிடப்பட்டது. பார்த்த ஞாபகம் இல்லையோ, உன்னை ஒன்று கேட்பேன், எங்கே நிம்மதி போன்ற அருமையான பாடல்கள் நிறைந்த இந்தப் படம் திரையிட்ட முதல் மூன்று தினங்களும் ஹவுஸ்ஃபுல்லாக வசூலை வா‌ரிக் கொட்டியிருக்கிறது. புதிய படங்கள் ஈயடித்துக் கொண்டிருந்த போது புதிய பறவைக்கு கூட்டம் அலைமோதியது.

இதனால் சிவா‌ஜியின் புகழ்பெற்ற திரைப்படங்களை அவ்வப்போது திரையிடுவது என முடிவெடுத்திருக்கிறது சிவா‌ஜியின் குடும்பம்.

சிவா‌ஜி ரசிகர்களை குஷிப்படுத்தும் முடிவு.